நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன.
இதன்பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர தரிப்பிடத்தில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
இதேவேளை, வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் ஓகஸ்ட் 21 ஆம் திகதி திங்கட்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.