மலையக பெருந்தோட்ட மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.
நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற, பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் குறைகளை கேட்டறிந்துக் கொள்ள விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும்.
இந்த ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் யோசனைகளை உடனடியாக நிறைவேற்ற ஜனாதிபதி செயலயணியொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவ்வாறு மேற்கொள்ளும்போது, அம்மக்களின் உரிமைகளை குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் நிறைவேற்ற ஒரு துரித சந்தர்ப்பம் கிடைக்கும்.
பெருந்தோட்ட மக்களை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் வலுப்படுத்த வேண்டும்.
எனினும், இதனை மேற்கொள்ள இந்த அரசாங்கத்தினால் முடியுமா என தெரியவில்லை.
எதிர்க்காலத்தில் நாம் ஸ்தாபிக்கவுள்ள அரசாங்கத்தில் இந்த செயற்பாட்டை நிச்சயமாக மேற்கொள்வோம்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.