தேர்தல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்காமல் தாமதம் ஏற்படுத்திய ட்விட்டர் நிறுவனத்துக்கு ரூ.2.89 கோடி அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணைக்காக முன்னாள் அதிபர் டிரம்பின் ட்விட்டர் பதிவுகளை வழங்க கோரி அந்நிறுவனத்துக்கு கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு முடிவடைந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்னும் முழுமையான தகவல்களை அந்நிறுவனம் வழங்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.