யாழில் இளைஞரின் பாலியல் தொல்லையால் மனஉளைச்சலுக்கு உள்ளான 12 வயதான சிறுமியொருவர் தனது உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த சிறுமி தனது உயிரை மாய்க்க முயன்ற நிலையில் குடும்பத்தினரால் காப்பாற்றப்பட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் விசாரணையில் ”தனக்கு 21 வயதுடைய இளைஞன் ஒருவர் தொலைபேசி ஊடாக ஆபாச குருஞ்செய்திகளை தொடர்சியாக அனுப்பிவந்துள்ளார் எனவும், தவறான தொடுகைகள் மூலம் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் எனவும், இதனால் மனஉளைச்சலுக்கு உள்ளான நிலையிலேயே உயிரை மாய்க்க முயன்றதாகவும்” குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.