பா.ஜ.க அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது மக்களவையில் 3ஆவது நாளாக விவாதம் இன்றும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தற்போது கருத்து தெரிவித்திருந்தார்.
அத்துடன் ஊழலற்ற ஆட்சியை நாங்கள் வழங்கி உள்ளதாகவும் தழிழகத்தில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புக்களை தாங்கள் பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தம் மீது நம்பிக்கை வைத்த நாட்டு மக்களுக்கு நன்றியும் இதன்போது தெரிவித்தார்.
மேலும் மணிப்பூரில் ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு எதிர்க்கட்சிகள் பா.ஜ.க அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்த முயற்சிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.