• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
ஜனாதிபதி தலைமையில் தேசிய வீட்டு வசதி திட்டம் வடமாகாணத்தில் ஆரம்பம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/16
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தமக்கென ஒரு இடம் – அழகான வாழ்க்கை’ என்ற தொனிப்பொருளின் கீழ், நாடு முழுவதும் 31,218 புதிய வீடுகளை நிர்மாணிக்கும் தேசிய வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்டு வீடுகளின்றித் தவிக்கும் 2,500 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் விசேட வேலைத்திட்டம் இன்று (16) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – மீசாலை கிழக்கில் தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவரின் வீட்டுக்கான அடிக்கல், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில், குறித்த பயனாளியின் குடும்பத்தாரால் நடுகை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மீசாலை வீரசிங்கம் ஆரம்பப் பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வில், பயனாளிகளுக்கான வீட்டு மானியக் காசோலைகள் ஜனாதிபதி முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.

நீண்டகாலமாக தற்காலிக வசிப்பிடங்களில் வாழ்ந்து வரும் இடம்பெயர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கிலும், அவர்களுக்குப் பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கிலும் இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்நிகழ்வில், மற்றும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் உரையாற்றினர்.

அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சிறப்புரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு அமைச்சர் கலாநிதி எச்.எம்.சுசில் ரணசிங்க, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால, வடமாகாண ஆளுநர் ந. வேதநாயகன் , யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.றஜீவன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா க.இளங்குமரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்கவை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதன்போது ஜனாதிபதி வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், விகாராதிபதியிடம் ஆசியும் பெற்றுக்கொண்டார்.

அண்மைக்காலமாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள தையிட்டி விகாரை தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களின் காணி என்றும், தையிட்டி விகாரைக்கு தனியான காணி இருந்தும் பொதுமக்களின் காணியில் அந்த விகாரை கட்டப்பட்டுள்ளதாகவும் நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

blank

Related

Tags: anurakumara disanayakkaJaffnasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விளக்கமறியலில் வைக்கப்பட்ட தேரர்களை சந்திப்பதற்காக விமல் வீரவன்ச திருகோணமலை சிறைச்சாலைக்கு வருகை

Next Post

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் – மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!

Related Posts

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!
இலங்கை

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!
இலங்கை

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!
கிரிக்கெட்

மான்செஸ்டர் சிட்டி வீரரை தட்டிச்சென்ற டொட்டன்ஹாம்!

2026-08-25
அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!
இலங்கை

அக்கரை மீனவர்களுக்கு இந்திய உயர்ஸ்தானிகரகத்தால் மீன்பிடி உபகரணங்கள் வழங்கி வைப்பு!

2026-08-25
Next Post
இண்டிகோ விமானத்தால் சிக்கி தவிக்கும் 400 பயணிகள்

அமெரிக்க தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக, ஈரான் வான்வெளி மூடல் - மாற்றுப் பாதைகளில் இயக்கப்படும் இந்திய விமானங்கள்!

நிந்தவூர் சுகாதார பிரிவில் டெங்கு மற்றும் உணவு சுகாதார பரிசோதனை

ட்ரம்புக்கு நோபல் பதக்கம் வழங்கிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் – உறுதிப்படுத்தியது வெள்ளை மாளிகை !

ட்ரம்புக்கு நோபல் பதக்கம் வழங்கிய வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் - உறுதிப்படுத்தியது வெள்ளை மாளிகை !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

0
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

0
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

0
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

0
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

0
இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

இருமுடி படத்திற்கு எதிராக ஆந்திர ஆசிரியர்கள் கண்டனம் !

2026-08-25
சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

சீன உரக் கப்பல் இறக்குமதி விவகாரம்: முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகேவுக்கு எதிரான வழக்கு டிசம்பருக்கு ஒத்திவைப்பு!

2026-08-25
மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

மன்னார் படுகையில் பெட்ரோலிய ஆய்வு உரிமங்கள் வழங்கள்: அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது எரிசக்தி அமைச்சு!

2026-08-25
பேரிடர் உயிரிழப்புக்களை உயிரித்த ஞாயிறு தாக்குதல்களுடன் ஒப்பிடுவது நியாயமற்றது- அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவிப்பு!

அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள்!

2026-08-25
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் போராட்டம் முன்னெடுப்பு!

2026-08-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.