சட்டம் அனைவருக்கும் பொதுவானது, நீதியால் மாத்திரமே ஒரு நாட்டினை கட்டியெழுப்ப முடியும் இருந்த போதிலும் தேசிய மக்கள் சக்தியினருக்கு ஒரு சட்டமும் ஏனையோருக்கு ஒரு சட்டகும் இந்த நாட்டில் இருப்பது ஏன் என சீலரத்ன தேரர் கேள்வி எழுப்பினார்.
திருகோணமலை கடற்கரையை ஒட்டிய ஒரு நிலத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலையை நிறுவிய குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பலாங்கொட காஷ்யப தேரர் மற்றும் பிறரின் நலம் குறித்து விசாரிக்க தேசிய ஜனசெத முன்னணியின் தலைவரான வணக்கத்திற்குரிய பத்தரமுல்ல சீலரத்ன தேரர் இன்று திருகோணமலை சிறைச்சாலைக்கு விஜயம் செய்தார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது வணக்கத்திற்குரிய சீலரத்ன தேரர். எமது நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அவர்களை ஆட்சிக்குக் கொண்டு வந்து, தற்போது நாட்டில் புத்த சாசனம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.












