அமெரிக்காவின் ஹவாய் தீவு பகுதியில் கடந்த வாரம் திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. பின்னர் இந்த காட்டுத்தீ நகரின் மற்ற பகுதிகளுக்கு வேகமாக பரவ ஆரம்பித்தது.
இந்த காட்டுத்தீயில் சிக்கி இதுவரை 93 பேர் பலியாகியுள்ளனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருவதால் பலியானோர் எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் நிவாரண முகாம்களில் தங்கி இருந்தவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர்.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்து இருப்பதால் இயல்பு நிலை திரும்ப பல ஆண்டுகள் ஆகும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.