ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
கஸ்பியன் கடலின் கடற்கரையில் உள்ள தாகெஸ்தான் பிராந்திய தலைநகரான மகச்சலாவில் இந்த வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது,
பெட்ரோல் நிலையத்திற்கு அருகிலுள்ள கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் முதலில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதேநேரம் டகெஸ்தானில் உள்ள கும்டோர்கலின்ஸ்கி மாவட்டத்தில் அவசரகால நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அப்பிராந்தியத் தலைவர் அறிவித்துள்ளார்.