காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு வழிகாட்டு நெறிகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் சட்டத்தின் 11 (இ) பிரிவின் ஏற்பாட்டுக்கமைய, குறித்த அலுவலகத்தின் தத்துவங்கள், கடமைகள் மற்றும் பணிகளைப் புரிதலுக்கு வழிகாட்டு நெறிகளையும் வழங்குதல் வேண்டும்.
மேலும், இவற்றை நிறைவேற்றுதல் தொடர்பாக பின்பற்றப்பட வேண்டிய கொள்கைகளை உள்ளடக்கக் கூடியவையான விதிகளையும் வழங்குதல் வேண்டும்.
அதற்கமைய, சட்டமா அதிபரால் வழங்கப்பட்டுள்ள அவதானிப்புக்கள் மற்றும் சிபாரிசுகளைக் கருத்தில் கொண்டு குறித்த வழிகாட்டுநெறி தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான பத்திரம், நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சரினால் நேற்றைய அமைச்சரவைக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளது.