நாடளாவிய ரீதியில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் வருமான அனுமதிப்பத்திரங்களை வழங்கும் eRL.2.0 வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
150 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கு முறையான பயிற்சிகளை வழங்கும் இரண்டு நாள் வேலைத்திட்டம் இடமபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் பரமி தென்னகோன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக அனைத்து இலங்கையர்களும் தமது சேவைகளை விரைவாக நிறைவேற்றிக் கொள்வதே நோக்கமாகும் என்றும் மத்திய மாகாண போக்குவரத்து ஆணையாளர் குறிப்பிட்டார்.