உக்ரேன் – ரஸ்யா மோதல் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதன் முறையாக உக்ரேன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy சுவீடனுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றினை முன்னெடுத்துள்ளார்.
குறித்த விஜயத்தின் போது உக்ரேன் – ரஸ்யா மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பில் சுவீடனிலுள்ள உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை உக்ரேன் Chernihiv பகுதியில் ரஸ்யா நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 07 ஆக அதிகரித்துள்ளதுடன் 100 பேர் காயமடைந்துள்ளனர்.
அந்த நகரில் உள்ள திரையரங்கு, பல்கலைக்கழகம் உள்ளிட்ட பொது உட்கட்டமைப்புகளை குறி வைத்து நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது.
குறித்த தாக்குதலுக்கு உக்ரேன் ஜனாதிபதி உள்ளிட்ட பல நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.