73 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28 வீதமாக குறைந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் எட்டு இலட்சத்து இருபதாயிரம் ஏக்கர் அடியாக குறைந்துள்ளதாக நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியியலாளர் சுதர்ஷனி விதானபத்திரன தெரிவித்தார்.