உலகளாவிய ஹெட்ஜ் நிதித்தில் சொத்துத்துறை மற்றும் பலவீனமான பொருளாதார தரவுகளின் மீதான உயர்ந்த கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் பங்குகள் தீவிரமாக விற்பனை செய்யப்படுவதாக கோல்ட்மென் சாக்ஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து வகையான பங்குகளும் விற்கப்பட்டன, ஆனால் உள்நாட்டு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகள் விற்பனைக்கும் வழிவகுத்தன. அதில் 60சதவீதமான பங்குகள் உள்ளன என்று வங்கித்துறை தெரிவித்துள்ளது,
ஒக்டோபர் 2022 க்குப் பிறகு 10நாடகளில் சீனப் பங்குகளில் இதுவே மிகப்பெரிய நிகர விற்பனையாகும் என்றும் கடந்த ஐந்தாண்டுகளில் மிக அதிகமான பங்கு விற்பனை நகர்வுகளில் இதுவும் ஒன்றாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோல்ட்மென் சாக்ஸ், முதலீட்டாளர்களுக்கு அதன் பிரதான தரகு அலகு மூலம் கடன் மற்றும் வர்த்தக சேவைகளை வழங்கும் மிகப்பெரிய வழங்குநர்களில் ஒருவராக, உள்ளதோடு ஹெட்ஜ் நிதியத்தின் முதலீட்டு போக்குகளைக் கண்காணிக்க கூடியதாகவும் உள்ளது.
சமீபத்திய நிகழ்வுகளின் அடிப்படையில், சீனாவின் தனது பொருளாதாரக் கண்ணோட்டத்தை இருட்டடிப்பதால், உலகளாவிய முதலீட்டாளர்கள் சீனாவின் பொருளாதாரம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர்.
சீனப் பொருளாதாரத் தரவுகளின் பரந்த வரிசையானது பொருளாதாரத்தின் மீது பல முனைகளில் இருந்து அழுத்தத்தை தீவிரப்படுத்தியதோடு பீஜிங் செயற்பாட்டை அதிகரிக்க முக்கிய கொள்கை விகிதங்களைக் குறைக்க தூண்டியது.
சீன சொத்து நிறுவனமான ‘கன்ட்ரி கார்டன்’ ஒரு தனியார் கடலோரப் பத்திரத்தில் பணம் செலுத்துவதைத் தாமதப்படுத்த முயல்கிறது. கோட்யூ, டி1 கபிடல் மற்றும் டைகர் குளோபல் உள்ளிட்ட அமெரிக்க அடிப்படையிலானவை இரண்டாம் காலாண்டில் சீனப் பங்குகளில் தங்களின் நிலைகளை குறைத்துள்ளன.
ஏனெனில் அந்நாட்டின் பொருளாதார வாய்ப்புகள் ஏற்கனவே தளம்புவதும், புவிசார் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளமையே அதற்கு காரணமாகின்றது.