7 கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான மூன்று கிலோ தங்கம் மற்றும் கைத்தொலைபேசிகளை சட்டவிரோதமான முறையில் கொண்டு வந்த நாடாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அறநெறிகள் மற்றும் சிறப்புரிமைகள் குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றக் குழுவிற்கு அறிவித்து சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அவைத் தலைவர் அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த சிறப்புரிமைக் கேள்வியொன்றை முன்வைத்து கோரிக்கை விடுத்தார்.
நாடாளுமன்ற சிறப்புரிமை மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டை துஷ்பிரயோகம் செய்து அவர் மே மாதம் 23 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலைய விஐபி முனையத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்த தங்கம் மற்றும் கைத்தொலைபேசியை இலங்கைக்கு கொண்டு வந்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க விதிகளை அவர் மீறியதாலும், ஒரு மக்கள் பிரதிநிதி மக்களின் நம்பிக்கையை மீறியதாலும், இந்த அதியுயர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுசில் பிரேமஜயந்த சுட்டிக்காட்டி இருந்தார்.