பற்றாக்குறையாக உள்ள மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 50 வகையான மருந்துகள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படும்
இதன்படி மருந்து தட்டுப்பாடு ஓரளவு கட்டுப்படுத்தப்படும். தற்போது மருத்துவ விநியோகத் துறையில் 230 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
அந்த மருந்துகள் அனைத்தும் உடனடியாக முன்பதிவு செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய மருந்துகளின் இறக்குமதி இந்தியாவின் கடனுதவியின் கீழ் பெற்றுக்கொள்ளப்படும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.