19 ஆவது உலக சம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் முடிவில் அமெரிக்கா பதக்கப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.
12 தங்கப் பதக்கங்கள், 08 வெள்ளிப் பதக்கங்கள், 09 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 29 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.
இதில் 04 தங்கப் பதக்கங்கள், 02 வெள்ளிப் பதக்கங்கள் என மொத்தம் 06 பதக்கங்களுடன் கனடா பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
04 தங்கப் பதக்கங்கள் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்துடன் 05 பதக்கங்களுடன் ஸ்பெயின் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தடகளப் போட்டிகளில் சிறப்பாகச் செயற்பட்ட ஜமைக்கா 03 தங்கப் பதக்கங்கள், 05 வெள்ளிப் பதக்கங்கள், 04 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 12 பதக்கங்களை வென்று நான்காவது இடத்தைப் பெற்றுள்ளது/
50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டியில் குறைந்தபட்சம் 46 நாடுகள் ஏதேனும் பதக்கத்தை வென்றிருப்பது சிறப்பாகும்.