50 ஓவர்கள் கொண்ட ஆசியக் கிண்ண தொடர் நேற்றைய தினம் ஆரம்பமாகிய நிலையில் முதலாவது போட்டியிலேயே பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பாகிஸ்தானின் முல்தான் மைதானத்தில் இடம்பெற்ற குழு ஏ பிரிவுக்கான போட்டியில் பாகிஸ்தான் அணியும் நேபாளம் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுளர்ச்சியில் நாணய சுழற்சியில் வேற்று முதலில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக பாபர் அசாம் 151 ஓட்டங்களையும் இப்திகார் அகமட் 109 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். பந்துவீச்சில் நேபாள அணி சார்பாக சோம்பால் கமி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.
தொடர்ந்து 343 என்ற வெற்றி இலக்கோடு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாள அணி 23.4 ஓவர்களில் நிறைவில் அனைத்து விக்கெட்டிகளையும் இழந்து 104 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
அவ்வணி சார்பாக சோம்பால் கமி 28 ஓட்டங்களையும் ஆரிப் ஷேக் 26 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொள்ள பந்துவீச்சில் ஷதாப் கான் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
இதனால் பாகிஸ்தான் அணி 238 ஓட்டங்களினால் அபார வெற்றியை பதிவு செய்த நிலையில் இப்போட்டியின் ஆட்ட நாயகனாக பாபர் அசாம் தெரிவு செய்யப்பட்டார்.