யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் ஜனாதிபதித் தேர்தலில் 70 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
70.4 சதவீத வாக்குகளை பெற்று அவர் 09வது ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளதாக சிங்கப்பூர் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும் துணை பாதுகாப்பு அமைச்சராகவும் 2011ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் தர்மன் சண்முகரட்ணம் சர்வதேச நாணய நிதியத்தின் நிதிக்குழுவின் தலைவராக பணியாற்றியுள்ளார். இந்தநிலையில் அவரை எதிர்த்து போட்டியிட்ட எங் கொக் சாங் 15.72 சதவீத வாக்குகளையும், டான் கின் லியான் 13.88 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் சிங்கப்பூர் பிரஜைகள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மதிப்பளித்து அதைக் காப்பாற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாக தர்மன் சண்முகரத்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.