ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் பின்னனியில் அரச புலனாய்வு சேவையின் தலைவர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே இருந்ததாக லண்டன் டைம்ஸ் அறிக்கை கூறுகிறது.
2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்கு விசுவாசமாக இருந்த இலங்கை அதிகாரிகள் உடந்தையாக இருந்தனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியான சுரேஷ் சாலி மற்றும் ஐ.எஸ். அமைப்பு இடையே ஒரு சந்திப்பு 2018 இல் இடம்பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையை சீர்குலைக்கவும் ராஜபக்சர்களை மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு சதித்திட்டம் தீட்டும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெறத்தாக பிரித்தானிய ஊடகமான த டைம்ஸ் தெரிவித்துள்ளது.
“கூட்டம் முடிந்தது, சுரேஷ் சாலி என்னிடம் வந்து ராஜபக்சேக்களுக்கு இலங்கையில் பாதுகாப்பற்ற சூழல் தேவை, அதுதான் கோட்டாபய ஜனாதிபதியாவதற்கு ஒரே வழி” என ஹன்சீர் ஆசாத் மௌலானா கூறுகிறார்.
தாக்குதல் என்பது ஓரிரு நாட்களில் செய்யப்பட்ட திட்டம் அல்ல, திட்டம் இரண்டு, மூன்று ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பின்னர் 6 மாதங்களில் பாதுகாப்பை மீட்டெடுப்பதாக வாக்குறுதி அளித்து கோட்டாபய ராஜபக்ச ஆட்சியைப் பிடித்தபோது சாலி இராணுவப் புலனாய்வுத் தலைவராக பதவி உயர்வு பெற்றார்.
இவர் இதற்கு முன்னர் தனது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
மௌலானா கடந்த ஆண்டு இலங்கையை விட்டு வெளியேறி ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார்.
இதேவேளை பெயரிடப்படாத மூத்த அரசாங்க அதிகாரி, இரண்டாவது விசில்ப்ளோயர் தாக்குதல் தரிகளுடன் சாலியின் உறவுகள் பற்றிய மௌலானாவின் கருத்தை ஆமோதித்துள்ளார்.
மேலும் குண்டுவெடிப்புகளுக்கு முன்னும் பின்னும் இராணுவ புலனாய்வு, பொலிஸ் விசாரணைகளை மீண்டும் மீண்டும் தடுத்ததாகவும் கூறியுள்ளார்.
2019ல் ஆட்சிக்கு வந்ததும், விசாரணையில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர், விசாரணை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது என்றும் அந்த அதிகாரி கூறுகிறார்.
2021 ஆம் ஆண்டு குண்டுவெடிப்பு தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இறுதி செய்யப்பட்ட போதும், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ அதை வெளியிட மறுத்துவிட்டார்.
மேலும் மௌலானா பல ஆண்டுகளாக ராஜபக்சக்களுக்கு விசுவாசமான அரசியல்வாதியான பிள்ளையானுக்கு உதவியாளராக பணியாற்றினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.