சூடான் இராணுவத்தின் பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 32 பொதுமக்கள் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் போர் ஆரமபமத்தில் இருந்து நாள் ஒன்று பதிவாகிய அதிகபட்ச எண்ணிக்கை இதுவென்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சூடான் படைகளுக்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் மோதல் தொடங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் பின்னர் நேற்று (புதன்கிழமை) ஒரே நாளில் அதிகளவான பொதுமக்கள் உயிரிழந்ததாக சூடான் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சூடானில், ஒம்பாடா பகுதியில் நடத்தப்பட்ட இந்த வான்வழித் தாக்குதல்களில் மேலும் பல பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மோதல்கள் காரணமாக சுமார் 4 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ள அதேநேர்ம ஆயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.