உலகின் முன்னாள் இரண்டாம் நிலை வீரரான ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் அரையிறுதி போட்டிக்கு கார்லோஸ் அல்கரஸ் முன்னேறியுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டிகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ள நிலையில் நாளை மறுதினம் அரையிறுதி போட்டிகள் இடம்பெறவுள்ளன.
இன்று இடம்பெற்ற காலிறுதி போட்டியில் ஜேர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கரஸிம் பலப்பரீட்சை நடத்தினர்.
இப்போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய கார்லோஸ் அல்கராஸ் 6-3, 6-2,6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் நாளை மறுதினம் நடைபெறவுள்ள அரையிறுதி போட்டியில் ரஷ்ய வீரரான டானியல் மெட்வெடேவுடன், கார்லோஸ் அல்கராஸ் பலபரீட்சை நடத்தவுள்ளார்.
மற்றுமொரு அரையிறுதி போட்டியில் சேர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் மற்றும் அமெரிக்காவின் பென் ஷெல்டன் ஆகியோர் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.