இந்தியா சரியான நேரத்தில் G-20 மாநாட்டினைத் தலைமையேற்றுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான ஜி 20 மாநாடாடு எதிர்வரும் 9 மற்றும் 10 திகதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இம்மாநாடு இது குறித்து இந்திய வம்சாவளியைச் பிரதமர் ரிஷியிடம் ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ” இந்தியாவின் பன்முகத்தன்மை மற்றும் இதன் அசாதாரண வெற்றிகளை வைத்து பார்த்தால், சரியான நேரத்தில் ஜி20 தலைமையை இந்தியா பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடியின் தலைமைத்துவத்திற்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இந்தியா இத்தகைய உலகளாவிய தலைமையை வெளிப்படுத்துவதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், பிரித்தானியா, இந்தியாவுடன் நெருக்கமாகச் செயற்பட்டு உலகளாவிய பிரச்சனைகளையும், உலகப் பொருளாதாரத்தை நிலைப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தைக் கையாள்வது வரை இயங்கவிருக்கிறோம். இந்த 2023ம் ஆண்டு இந்தியாவிற்கு ஒரு மிகப்பெரிய ஆண்டாகும். ஏனெனில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் அனைத்து ஜி20 கூட்டங்கள், அடுத்த மாதம் நடைபெறும் கிரிக்கெட் உலகக் கோப்பை என இந்த ஆண்டின் மிகப்பெரிய உலகளாவிய புவிசார் அரசியல் நிகழ்வுகளின் தாயகமாக இந்தியா உள்ளது”.
மேலும், ஜி20 உச்சி மாநாட்டின் வெளிப்பாடு எவ்விதம் இருக்கும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இந்த உச்சி மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிக்க இந்தியாவிற்கு பிரித்தானியா உறுதுணையாக இருக்கும். அத்துடன் எனது மனைவி இந்தியராகவும் பெருமைமிக்க இந்துவாகவும் இருப்பதால் இந்தியாவுடனும் இந்திய மக்களுடனும் எனக்கு எப்போதும் தொடர்பு இருந்து வருகிறது. மேலும், எனது இந்திய வம்சாவளிகள் குறித்தும் இந்தியாவுடன் எனக்கிருக்கும் தொடர்பு குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.