ஹட்டன்,நோர்வூட் தமிழ் மகா வித்தியாலத்தில் உள்ள தொழிற்தேர்ச்சி கூடத்தில் கல்வி கற்கும் மாணவர்களினால் நேற்றைய தினம் கண்காட்சியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
சாதாரண தர பரீட்சையின் பின்னர் நோர்வூட் தமிழ் மகா வித்தியாலயத்தின் தொழிற் தேர்ச்சிக் கூடத்தில் தொழிற் கல்வியை மேற்கொண்ட 2022 – 2023 ஆம் வருட மாணவர்களினாலேயே குறித்த கண்காட்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இக்கண்காட்சியில் குறித்த மாணவர்களால் செய்யப்பட்ட, கைவினைப்பொருட்கள், அலங்கார பொருட்கள், உணவு பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாடசாலையின் அதிபர் எஸ்.ராஜன் தலைமையில் நடைபெற்ற இவ் கண்காட்சிக்கு ஹட்டன் கல்வி வலயத்தின் முறைசார கல்வி செயற்திட்ட அதிகாரி, பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உட்பட பலரும் வருகை தந்து அம்மாணவர்களால் செய்யப்பட்ட பொருட்களைக் கொள்வனவு செய்து அவர்களை ஊக்கப்படுத்தியிருந்தனர்.