2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நாடாமன்றத்தில் இரண்டு நாள் ஒத்திவைப்பு விவாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் குறித்த விவாதத்தை நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல் குழு தீர்மானித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் , 21 மற்றும் வெள்ளி, 22 ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு நிலைமைகள் குறித்த விவாதம் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெறும்.
மேலும், அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான தீர்மானமும் விவாதம் இன்றி நிறைவேற்றப்பட உள்ளது.