டோலி எனப்படும் குளோனிங் ஆட்டை உருவாக்கிய குழுவை வழி நடத்திய பிரித்தானியாவைச் சேர்ந்த விஞ்ஞானி இயன் வில்முட் (Ian Wilmut) தனது 79ஆவது வயதில் கடந்த 10 ஆம் திகதி காலமானார்.
பார்கின்சன் நோயின் காரணமாக அவர் உயிரிழந்ததாக ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் அறிவியல் துறையில் மாபெரும் புரட்சி செய்த அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்