ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-04 சுற்றின் 5ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி, இலங்கை அணிக்கு 252 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இப்போட்டியில் மழைக்குறுக்கிட்டதால், போட்டி 45 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டு போட்டி ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இடைநடுவே மீண்டும் மழைக்குறுக்கிட்டதால் போட்டி 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக மொஹமட் ரிஸ்வான் 86 ஓட்டங்களையும் அப்துல்லா ஷபீக் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மதீஷ பத்திரன 3 விக்கெட்டுகளையும் பிரமோத் மதுஷான் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் போது, மொஹமட் ரிஸ்வான் மற்றும் இப்தீகார் அஹமட் ஆகியோர் இணைந்து 108 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 252 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி இலங்கை கிரிக்கெட் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.