குருந்தூர்மலையில் இடம்பெற்ற பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவித்ததாக கல்கமுவ சந்தபோதி தேரரால் தொடரப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரன் மற்றும் வினோ நோகராதலிங்கத்தை தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கானது முல்லைத்தீவு நீதிமன்றில் இன்று (14) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே குறித்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிணைவழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வழக்கானது அடுத்தவருடம் ஜனவரி மாதம் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.