ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்க எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணை இடம்பெற்ற போது, சசித்ர சேனநாயக்க சார்பாக விடுக்கப்பட்ட பிணை கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
2020 லங்கா பிரிமியர் லீக் போட்டியில் தம்மிக்க பிரசாத் மற்றும் இளம் வீரர் தரிந்து ரத்நாயக்கவை ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்ட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் விசாரணை ஆரம்பமானதை அடுத்து சசித்ர சேனநாயக்கவிற்கு மூன்று மாதங்களுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.