ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவதுகூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை அமெரிக்கா நியூயோர்கை சென்றடைந்துள்ளார்.
அதற்கமைய ஜனாதிபதி செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தொடரில் தனது விசேடஉரையை ஆற்ற உள்ளார்.
இம்முறை கூட்டத்தொடர் ஆனது நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல் என்ற தொனிப்பொருளின் கீழ்
கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
மேலும் கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் ஜனாதிபதி
பங்கேற்கவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு
குறிப்பிட்டுள்ளது.