வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டை மீட்டெடுக்க தவறுகளை திருத்திக் கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டிய வேளையில் அந்தப் பயணத்தில் வெறுப்பும் கோபமும் கலந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கது என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
நாடு வங்குரோத்து அடைந்தமைக்கான காரணம் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் தாம் வெளியிட்ட அறிக்கையை திரித்து நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளை அவமதிக்கும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டமைக்கு தாம் வருத்தம் தெரிவிப்பதாக வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் நாட்டின் நிலைமையை விளக்கியதாகவும், எந்தவொரு நிதியமைச்சு அதிகாரியின் பெயரையும் தாம் குறிப்பிடவில்லை எனவும் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
வங்குரோத்து அடைந்த நாட்டை சரியான பாதைக்கு கொண்டு வரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகளுக்கு நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் ஆதரவை வழங்கி வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.