உலக நாடுகளுக்கு இடையே பரவி வரும் நிபா வைரஸ் தொற்றுக் குறித்து நாட்டிலுள்ள மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள தேவையில்லை என தொற்றுநோயியல் விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டிற்கு பின்னர் கேரளாவில் பதிவான நிபா வைரஸ் தொற்று தற்போது பல நாடுகளிலும் பரவி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து கேரளாவில் 6 நெபா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் நிபா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பிரதேசங்களுக்கு ஊரடங்கு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதுடன் வைரஸ் தொற்றுக்கான பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 1080 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பன்றிகள் மற்றும் வெளவால்கள் மூலமாக இந்த தொற்று உருவாவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும் இந்த தொற்றுக்கான தடுப்பூசி தற்போது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதோடு இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு விரைவில் பாரவக்கூடியது என தெரிவிக்கப்படுகின்றது.