சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 26ஆம் திகதி நிதியமைச்சராக கைச்சாத்திட உள்ளார்.
இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதன் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணை இலங்கைக்கு வழங்கப்படும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான கலந்துரையாடல் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், இந்த கலந்துரையாடல்களில் ஜனாதிபதியின் பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க கலந்து கொண்டுள்ளார்.
அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்கும் இலக்குகள் இன்னும் எட்டப்படவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ள நிலையில், இந்த வேலைத்திட்டத்தின் முழுப்பொறுப்பையும் அரசாங்கம் ஏற்கும் என சாகல ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், அரசாங்கத்தின் வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமாயின் முதலீடுகளும் அதிகரிக்க வேண்டும் எனவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.