இந்தியாவில் 50 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் ஆரம்பமாக உள்ளது.
இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, நியூசிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அகமதாபாத்தில் மோதவுள்ளன.
இந்நிலையில், உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
அதன்படி, செம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசும், இரண்டாவது இடத்தை பெறும் அணிக்கு 8 இலட்சம் அமெரிக்க டொலரும், அரையிறுதியில் தோல்வி அடையும் 2 அணிகளுக்கும் 6 மில்லியன் அமெரிக்க டொலரும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குழு நிலை சுற்றுப் போட்டிகளுடன் வெளியேறும் அணிகளுக்கு 40ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.