”இனிமேல் கடவுச் சீட்டு இன்றி விமானப் பயணங்களை மேற்கொள்ள முடியும்” என சிங்கப்பூர் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றான சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையிலேயே பயணிகளைக் கவரும் விதமாக இவ் அதிரடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் இத்திட்டத்தில் முதற்படியாக பயோமெட்ரிக் தரவுகளை மட்டும் பயன்படுத்தி கடவுச் சீட்டு இல்லாமல் பயணிகள் நகர மற்றும் மாநிலத்தை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.