காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டும் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட கர்நாடக அரசு மறுத்துள்ள நிலையில் பா.ஜ.. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்திலும் தமிழ்நாட்டிற்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 5,000 கன அடி நீரை கர்நாடக அரசு திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
எனினும் கர்நாடக அரசு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது.
அதில், தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்துவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் பா.ஜ.க. கட்சியினர் தொடர் போராட்டத்தை முனனெடுத்துள்ளனர்.