விண்வெளி துறையில் சாதனை படைத்து வரும் இந்தியா அடுத்த கட்டமாக ஆழ்கடலின் இரகசியங்களை ஆராயும் முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் உள்ள சென்னை தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் ‘மத்ஸ்யா 6000’ என்ற நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி உள்ளது.
ஆழ்கடலின் வளங்களை ஆய்வு செய்து, நீடித்து நிலையாக பயன்படுத்துவதற்கான தொழில் நுட்பங்களை வடிவமைத்து மேம்படுத்துவதே இதன் நோக்கம் என தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவகத்தின் இயக்குனர் ஆனந்த் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.