எரிமலையொன்றின் உச்சியில் சுமார் 700 ஆண்டுகள் பழமைவாய்ந்த பிள்ளையார் சிலையொன்று அமைந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தோனேசியாவின் குனுங் ப்ரோமோ என்ற பகுதியில் அமைந்துள்ள எரிமலையின் மீதே விக்நஹர்தா என்ற குறித்த விநாயகர் சிலை அமைந்துள்ளது.
இந்த விநாயகர் அமைந்திருக்கும் இடத்தில் வசிக்கும் மக்கள் டெனெகர் என்று அழைக்கப்படுவதோடு அம்மக்கள் குறித்த சிலையானது எரிமலை வெடிப்பில் இருந்து தம்மை பாதுகாப்பதாகவும் நம்புகின்றனர்.
குறிப்பாக அப்பிள்ளையார் சிலையை டெனெகர்களின் மூதாதயர்கள் அந்த எரிமலையின் உச்சியில் பிரதிஷ்டை செய்ததாகவும், நூற்றாண்டுகளாக இவர்கள் இந்த கடவுளை வழிபட்டு வருவதாகவும் கூறுகின்றனர்.
அத்துடன் ஒரு வேளை இந்த எரிமலை வெடித்தாலும், இந்த பகுதி மக்கள் இவரை வழிபடுவதை நிறுத்துவதில்லை எனவும் விநாயகரே ஆபத்தில் இருந்து தம்மை காப்பதாகவும் மக்கள் நம்புகின்றனர்.