மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே பா.ஜ.க அரசாங்கம் மகளிருக்கு இடஒதுக்கீட்டு சட்டமூலத்தை சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியது என காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் ரஞ்சித் ரஞ்சன குற்றம் சுமத்தியுள்ளார்.
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டமூலம் கடந்த புதன்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சட்டமூலத்தை காங்கிரஸ்; கட்சி ஆதரிக்கிறது எனவும், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்காகவே பா.ஜ.க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் வழக்கமான கூட்டத்தொடரை விட்டு சிறப்புக் கூட்டத்தொடரில் நிறைவேற்றியுள்ளது எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில், பெண்களுக்கு முக்கியம் அளிப்பதாக இருந்தால் புதிய நாடாளுமன்ற கட்டிட ஆரம்ப விழாவில் , பழங்குடியினத்தைச் சார்ந்த முதல் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை அழைக்காதது ஏன்? ஏன கேள்வியும் எழுப்பியுள்ளார்.