எலிகள் கடித்துக் குதறியதில் 6 மாதக் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இண்டியனா என்ற பகுதியிலேயே கடந்த மாதம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று குறித்த குழந்தையின் பெற்றோர் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு தமது வேளைகளில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.
இதன்போது குறித்த அறையில் இருந்த எலிகள் சில குழந்தைகளைக் கடிக்க ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் குழந்தையின் அழுகுரலைகேட்ட பெற்றோர் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்துள்ள நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வீடு முழுவதும் அசுத்தமாக காணப்படுவதாகவும், பெற்றோரின் அலட்சியத்தின் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.