பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“சரியான முறைமைகளை பின்பற்றாமையினால் இன்று பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சரியான முறைமைகளில் ஏற்படும் மறுசீரமைப்புகளை பின்பற்ற நேரிடும்.
இதன் பின்னர் பயணிப்பது மிகவும் சவாலுக்குரிய விடயம். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை எந்தளவிற்கு வலுவானதாக மாற்றுகிறோம் என்பதும் சவாலுக்குரிய விடயம்.
அவற்றை நடைமுறைப்படுத்தும் போது மேலும் நாட்டு மக்களுக்கு சில அசௌகரியங்களை சந்திக்க நேரிடும்.
அரசாங்கம் என்ற ரீதியில் அதிலிருந்து நாங்கள் பின்வாங்குவதில்லை.
ஆனால் அந்த சரியான முறைமைகளை மறுசீரமைத்து நிலைபெற செய்வதுதானது நீண்ட காலத்திற்கு நாட்டு மக்கள் சிறந்த ஒரு வாழ்க்கை முறையை நடத்துவதற்கும் அன்றாட வாழ்வை எவ்வித தடைகளும் இன்றி முன்னெடுப்பதற்கு பிரதான காரணியாக அமையும்” என அவர் மேலும் தெரிவித்தார்.