பிரித்தானிய தொலைக்காட்சி வலையமைப்பான சனல் 4 ஒளிபரப்பிய ஆவணப்படத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடுமையாக சாடியுள்ளார்.
ஜேர்மனியை தளமாகக் கொண்ட சர்வதேச ஒளிபரப்பு நிறுவனத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு சாடியுள்ளார்.
பிரித்தானியவோ அல்லது ஜேர்மனியோ அவ்வாறான விசாரணைகளை மேற்கொள்ளாத போது எதற்காக இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகள் மாத்திரம் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் உட்பட எந்தவொரு பிரச்சினையிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சிலர் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுத்திருந்தாலும் நாடாளுமன்றம் அதனை கேட்கவில்லை என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.