வாழ்க்கைச் செலவு நெருக்கடியை தீர்க்க அதிக ஊதியங்களைக் கோரி இன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்ட காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை நைஜீரியாவின் இரு தொழிற்சங்கங்கள் நிறுத்தியுள்ளன.
தலைநகர் அபுஜாவில் தொழிற்சங்கங்களுக்கும் மத்திய அரசாங்கத்திற்கும் இடையே நேற்று இரவு இடம்பெற்ற பல மணிநேர பேச்சுவார்த்தையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களின் கோரிக்கைகளை 30 நாட்களுக்குள் நிறைவேற்றும் வகையில் அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
எரிபொருள் மானியங்களை அகற்றுவது உட்பட சமீபத்திய அரசாங்கக் கொள்கைகள் வாழ்க்கைச் செலவு நெருக்கடியை மோசமாக்கியுள்ளதால் 260 டொலர்களை மாதாந்த ஊதியமாக கோரியுள்ளன.