சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் 19 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரில் அஞ்சல் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை தன்வசப்படுத்திய இலங்கை, தட விதிமீறல் காரணமாக பதக்கத்தை இழந்துள்ளது.
4×400 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியிலேயே இலங்கை வெள்ளிப் பதக்கத்தை வென்று, அதனை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியில் இணைந்த இலங்கை அணி வீரர் ஒருவர் மற்றொருவரின் பாதையைத் தொட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போட்டியில் பஹ்ரைன் தங்கப் பதக்கத்தை வெற்றிக் கொண்டு முதலிடத்தை பெற்றுக்கொண்டது.
வெண்கலப் பதக்கத்தை வெற்றிக் கொண்டு மூன்றாவது இடத்தை பெற்ற இந்தியா, இலங்கை அணி தகுதியற்றது என அறிவிக்கப்பட்டதை அடுத்து, வெள்ளிப் பதக்கத்திற்கு உரித்துடையாதாகியுள்ளது.
நான்காவது இடத்தை பெற்ற கஜகஸ்தான் மூன்றாவது இடத்திற்கு தகுதி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டுள்ளது.
17 வருடங்களின் பின்னரரே ஆசிய விளையாட்டுப் போட்டித் தொடரின், தடகளப் போட்டியில் இலங்கை அணி பதக்கத்தை வென்றிருந்தது.
இந்த நிலையில், இந்தப் பதக்கமும் தற்போது இழந்துள்ளமையினால், இதுதொடர்பாக இலங்கை அணி, மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.