இணைய பாதுகாப்பு சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்பிற்கு இணங்கவில்லை என தெரிவித்து சமூக ஆர்வலரும் சுயாதீன ஊடகவியலாளருமான தரிந்து உடுவரகெதரவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் விதிகள் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் உள்ளிட்ட சில அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின், நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அல்லது சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடுமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
சர்ச்சைக்குரிய சில அம்சங்களுக்காக விமர்சிக்கப்பட்ட போதிலும், மிகவும் விவாதிக்கப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலம் இன்று காலை பாதுகாப்பு அமைச்சரால் ளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.