வீடுகள் மற்றும் அடுக்குமாடி கட்டிடங்களை குறிவைத்து வான் மற்றும் செல் தாக்குதல்களை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளன.
இதன் காரணமாக காசாவில் இருந்து சுமார் 123,538 பாலஸ்தீனியர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா மனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது.
வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டவர்களில் பலர் கடலோரப் பகுதியில் உள்ள சுமார் 64 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இஸ்ரேலிய தாக்குதல்களில் பல அடுக்கு மாடி குடியிருப்புகளும் அடங்குவதாக மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மொத்தம் 159 வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும் 1,210 கட்டடங்கள் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.