பாலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளால் இஸ்ரேல் மீது கடந்த 7 ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில், இசை நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட 250 பேர் உட்பட 700 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன் 2000 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு பலர் பணயக் கைதிகளாக காஸாவில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், அவசர உதவிகள் மூலமும், இஸ்ரேலில் பாதுகாப்பை அதிகரிப்பதன் மூலமும் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.