இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் வாகனங்கள் வாகனங்களை கொள்வனவு செய்ய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக இராணுவத்துக்கு 70 முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும் செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.