இஸ்ரேலுக்குள் ஹமாஸ் நடத்திய முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களில் தமக்கு எந்த தொடர்பும் இல்லை என ஈரான் அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக தொடர்ந்தும் இருப்போம் என்றும் ஐக்கிய நாடுகளுக்கான ஈரானின் பணியகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏழு தசாப்தகால அடக்குமுறை மற்றும் கொடூரமான குற்றங்களுக்கு எதிரான பாலஸ்தீனத்தால் எடுக்கப்பட்ட உறுதியான நடவடிக்கையே இதுவென்றும் அறிவித்துள்ளது.