பலஸ்தீன ஆயுதக் குழுவான ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்கும் வகையில் பல இராணுவக் கப்பல்கள் மற்றும் விமானங்களை இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இராணுவ உதவியை அதிகரிக்கும் என்றும் இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் என்றும் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் அஸ்டின் அறிவித்துள்ளார்.
இதேவேளை காசா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இரு தரப்பிலும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.